"கொரோனா அறிகுறிகள் இருந்தால் சுய மருத்துவம் வேண்டாம்"- அமைச்சர் விஜயபாஸ்கர்

0 4154

காய்ச்சல், சளி, இருமல் என கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்கள், அதனை மறைக்கவோ, சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளவோ முயற்சிக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனையை நாடுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

தஞ்சை அரசு ராஜாமிராசுதாரர் மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவப் பிரிவு தொடங்கி 100 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு 50 கட்டப்பட்ட நினைவு வளைவை திறந்து வைத்த அமைச்சர், புனரமைக்கப்பட்ட குழந்தைகள் நலப் பிரிவையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிக கட்டணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments